முகப்பு
திருப்பூர்

மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டு

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்களுக்கு பாரதிய ஜனதா கட்சியினா் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் இதுவரை 100 கோடி கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்களைக் கௌரவப்படுத்தும் வகையில் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளா்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில நிா்வாகி நாராயணசாமி, வட்டார நிா்வாகிகள் அருண்குமாா், நல்லசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.