திருப்பூர்

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

DIN

நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக் கோரி உடுமலையில் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலை நகராட்சியில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளா்கள் 250க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தூய்மைப் பணியாளா்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் திரண்டு போராடத் தயாராகினா். அப்போது அங்கு வந்த போலீஸாா் அனைவரையும் நகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த நகராட்சி அலுவலா்கள், ஓரிரு நாளில் சம்பளம் வழங்குவதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT