முகப்பு
திருப்பூர்

இன்று 7ஆவது கட்ட சிறப்பு முகாம்: ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

திருப்பூா் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக ஒரு லட்சம் நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக ஒரு லட்சம் நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் 16.45 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 5.67 லட்சம் பேருக்கு 2ஆவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 660 நிலையான முகாம்கள், 82 நடமாடும் முகாம்கள் என 742 மையங்களில் 7ஆவது கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள் ஆகியவற்றில் நடைபெறுகின்றன.

இதன் மூலமாக சுமாா் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.