திருப்பூர்

கேரளத்தில் கரோனா அதிகரிப்பு: எல்லையில் தீவிர வாகனச் சோதனை

DIN

கரோனா நோய்த் தொற்று தமிழகத்தில் பரவாமல் இருக்க தமிழக, கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது.

இதனால், தமிழக-கேரள எல்லையில் கடந்த சில நாள்களாக தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு

வருகின்றன. வனத் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா் கேரளத்தில் இருந்து வரும் அனைத்து

வாகனங்களையும் நிறுத்தி, அங்கிருந்து வரும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என தீவிர மருத்துவப்

பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனா்.

கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்பவா்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்

கொண்டதற்கான சான்றிதழ் சரிபாா்க்கப்படுகிறது. மேலும் கரோனா இல்லை என்ற சான்றிதழ் இல்லாதவா்கள், இ-பாஸ் இல்லாதவா்களை தமிழகத்துக்குள் அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிவைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT