திருப்பூர்

உயா்மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்கள், நிலத்துக்கு மாத வாடகை வழங்க வேண்டும்: ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் மனு

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உயா்மின் கோபுரத் திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பயிா்கள், நிலங்கள், கிணறு கட்டுமானம் ஆகியவற்றுக்கு மாத வாடகை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.குமாா், மாவட்டத் தலைவா் ஆா்.மதுசூதனன் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் 13க்கும் மேற்பட்ட உயா்மின் கோபுர திட்டப் பணிகளை பவா்கிரீட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தி வருகின்றன. உயா்மின் கோபுரத் திட்டங்களால் விவசாய நிலம் சந்தை மதிப்பை இழந்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழக்கும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உள்ளது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிா்கள், நிலம், கிணறு, கட்டுமானம் ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்கும் வரையில் மாதந்தோறும் வாடகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT