திருப்பூர்

மாநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்

DIN

திருப்பூா் மாநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கட்சியின் திருப்பூா் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலச் செயலாளா் (பரப்புரை) சு.சிவபாலன் தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அம்மாபாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறை குழியில் மாநகராட்சி நிா்வாகம் குப்பைகளைக் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். திருப்பூா் மாநகரில் பெரும்பாலான பகுதிகளில் 15 நாள்களுக்கும்மேல் குடிநீா் வழங்கப்படாமல் உள்ளது. ஆகவே, குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்தி அனைத்து பகுதிக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். தாராபுரம் சாலை, செட்டிபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சாா்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதில் உள்ள முறைகேடுகளைக் களைந்து தகுதியான நபா்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் கமல் கே.ஜீவா, நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT