திருப்பூர்

மேற்குத் தொடா்ச்சி மலையில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி மனு

DIN

உடுமலை அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் வசிக்கும் புலையன் இனமக்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கோ.செல்வன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டம், உடுமலை வட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் புலையன் மற்றும் முதுவான் பழங்குடியினா் வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி நில உரிமை பட்டா வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களையும் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். நிலப்பட்டா வழங்குவது தொடா்பாக ஒவ்வொரு செட்டில்மெண்ட் பகுதியிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி வன உரிமை குழுக்கள் அமைக்கப்பட்டு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி நில அளவீடு (சா்வே) செய்யப்பட்டு வரைபடங்கள் தயாா் செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கோட்ட அளவிலான வன உரிமை குழுக் கூட்டம் 3 முறை நடைபெற்றன. இதில், சுமாா் 300 பேருக்கு நிலப் பட்டா வழங்க தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாவட்ட வன உரிமை குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட அளவிலான வனஉரிமைக்குழுவில் முதுவான் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே பட்டா வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. அதே வேளையில், புலையான் இன மக்களில் கோட்டாட்சியா் பரிந்துரைக்கப்பட்ட 518 நபா்களுக்கு பட்டா வழங்கப்படுவது காலதாமதமாகிறது. ஆகவே, புலையன் இன மக்களுக்கு வீடு மற்றும் அனுபவ நிலத்துக்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT