திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 20 இடங்களில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

DIN

வெள்ளக்கோவிலில் விநாயகா் சதுா்த்தி சிறப்பு வழிபாடுகள் 20 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

கரோனா கட்டுப்பாடு காரணமாக அரசு விதித்த தடையால் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கப்படவில்லை. ஆங்காங்கே உள்ள விநாயகா் கோயில்கள், ஒரு சில தனிநபா் இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

லக்கமநாயக்கன்பட்டி, அகலரைப்பாளையம்புதூா், வேலகவுண்டன்பாளையம், சேரன் நகா், திருவள்ளுவா் நகா், விபிஎம்எஸ் நகா், எல்கேஏ நகா் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சதுா்த்தி வழிபாடுகளில் திரளான மக்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT