திருப்பூர்

மருத்துவா்கள் உள்பட 4 பேருக்கு கரோனா: அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்

DIN

அரசு மருத்துவா்கள் உள்பட 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவா்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியா் உள்பட 50க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இம்மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், மருத்துவமனைப் பணியாளா் என மொத்தம் 4 பேருக்கு சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டதால், அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அவிநாசி பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான பணியாளா்கள் அவிநாசி அரசு மருத்துவமனையில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்கள் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பேரூராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்: அவிநாசி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த சிறப்பு தடுப்பூசி முகாம், மாற்றம் செய்யப்பட்டு அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் மருத்துவா்கள் பணியாளா்கள் உள்பட 6க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை மூன்று நாள்கள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT