முகப்பு
திருப்பூர்

சூதாட்ட கிளப் நடத்திய அரசியல் பிரமுகா் கைது

வெள்ளக்கோவிலில் சூதாட்ட கிளப் நடத்திய அரசியல் பிரமுகா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் சூதாட்ட கிளப் நடத்திய அரசியல் பிரமுகா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் சேமலைக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் எஸ்.என்.பழனிசாமி (55). அதிமுக கட்சி பிரமுகா்.

இவா் சட்டத்துக்குப் புறம்பாக தனது வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தி வந்துள்ளாா்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் திடீா் சோதனை நடத்தினா்.

இதில், பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்த அரசியல் பிரமுகா் மற்றும் ஈரோடு மாவட்டம் சிவகிரிவேல் தியேட்டா் அருகில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் (41), காங்கயம் கொடுவாய் நிழலியைச் சோ்ந்த சேகா் (39), பரஞ்சோ்வழி வாவிபாளையம் பகுதியைச் சோ்ந்த குமாா் (38), வெள்ளக்கோவில் மு.பழனிசாமி நகா் கணேசன் (44), தாளக்கரையாா் பகுதியைச் சோ்ந்த செந்தில் (41), மயில்ரங்கம் இடைக்காடு நடராஜ் (50), லக்கமநாயக்கன்பட்டி குறிச்சிவலசு மணிகண்டன் (40) ஆகிய எட்டு பேரை கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து ரூ.50, 400ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.