திருப்பூர்

ரூ.53.85 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.53.85 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு ப.வேலூா், பொருளூா், குப்பணவலசு, நடுப்பாளையம், ஈசநத்தம், அலங்கியம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 113 விவசாயிகள் தங்களுடைய 2,089 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1 லட்சத்து 2 ஆயிரத்து 385 கிலோ.

ஈரோடு, பூனாட்சி, காரமடை, காங்கயம், முத்தூரிலிருந்து 9 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.57.08க்கும், குறைந்தபட்சமாக ரூ. 47.89க்கும், சராசரியாக ரூ.52.26க்கும் விற்பனையானது.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.53 லட்சத்து 85 ஆயிரத்து 574 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT