திருப்பூர்

சக்கராசனத்தில் பல்டி அடித்து அவிநாசி சிறுவன் உலக சாதனை

DIN

அவிநாசியில் 8 வயது சிறுவன் சக்கராசனத்தில் பல்டி அடித்து, புதிய சாதனை படைத்து, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான்.

அவிநாசி தபஸ் யோகாலயா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பழங்கரையைச் சேர்ந்த சிறுவன் டி.எம்.சபரிஷ்(8) 500 மீட்டர் தூரத்தை 10.45 நிமிடத்தில் 448 பல்டி அடித்து கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளான். 

இச்சிறுவனுக்கு, நோபல் உலக சாதனை புத்தகம் நிறுவன கண்காணிப்பாளர் விஷ்னு பைரவன் முன்னிலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவிநாசி வட்டாட்சியர் கே.பி.ராகவி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பிரசாத்குமார், கார்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

இது குறித்து சிறுவன் சபரிஷ் கூறியது} யோகாவில் புதிய சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்குடன், கடந்த ஓராண்டாக தபஸ் யோகாலயா மையத்தில் பயிற்சி பெற்று இச்சாதனை புரிந்துள்ளேன். சாதனைக்கு உதவிய யோகா ஆசிரியர்கள் ரகுபாலன், சத்யா ஆகியோருக்கு எனது நன்றி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT