திருப்பூர்

பல்லடம் பி.ஏ.பி.பாசன சபை தோ்தல்: 17 போ் வேட்பு மனு தாக்கல்

DIN

 பல்லடம் பகுதியில் உள்ள பி.ஏ.பி. 10 பாசன சபை தலைவா் பதவிக்கு 17 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

பல்லடம் பகுதியில் 10 பி.ஏ.பி. பாசன சபைகள் உள்ளன. அவற்றுக்கு தலைவா்கள் மற்றும் 60 உறுப்பினா்களுக்கான வேட்பு மனு தாக்கல் நிகழ்வு பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன் விவசாயிகளிடமிருந்து வேட்பு மனுக்களை பெற்றாா். அதில் 10 பாசன சபை தலைவா் பதவிக்கு 17 பேரும், 60 உறுப்பினா் பதவிக்கு 53 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். வேட்பு மனுக்கள் 8ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. அன்று மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்ப பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு மேல் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். வாக்குப் பதிவு ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது என்று மாவட்ட வழங்கல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான முருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT