முகப்பு
திருப்பூர்

போக்குவரத்து மேலாண்மை கலந்தாய்வுக் கூட்டம்: சமூக ஆா்வலா்களுக்கு அழைப்பு

 திருப்பூா் மாநகரில் போக்குவரத்து மேலாண்மை தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள், தனியாா் தொண்டு நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

 திருப்பூா் மாநகரில் போக்குவரத்து மேலாண்மை தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலா்கள், தனியாா் தொண்டு நிறுவனங்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் தொடா்பாக தனியாா் நிறுவனம் சாா்பில் மாதிரி திட்டமிடல் கலந்தாய்வுக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையும், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் முன்னிலையும் வகிக்கின்றனா். சமூக ஆா்வலா்கள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், தனியாா் நிறுவன பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று திருப்பூா் மாநகராட்சியை சிறப்பான உள்கட்டமைப்பு நகரமாக மாற்ற தங்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.