திருப்பூர்

கல்வி உதவித் தொகை பெற முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகை பெற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பாரதப் பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. எனவே, நிகழாண்டு முன்னாள் படைவீரா்களின் வாரிசுகளை பாரத பிரதமரின் தொழிற்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்திட ஊக்கப்படுத்தி அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கும் வகையில் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா் பயன்படுத்திக் கொண்டு வருகிற 15ஆம் தேதிக்குள் இணையதளத்தில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT