முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே காா் மோதி முதியவா் சாவு

 காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

காங்கயம், சென்னிமலை சாலை, வடுகபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (69), விவசாயி. இவா், காங்கயம் - சென்னிமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த காா், பழனிசாமி சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மருத்துவமனையில் பழனிசாமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், வெள்ளோடு, மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தம்பனன் (60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →