திருப்பூர்

அவிநாசியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மண் குதிரைகள் சுமந்து வந்து நோ்த்திக் கடன்

DIN

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னக்கருணைபாளையத்திலிருந்து, ஆகாசராயா் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வந்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை உண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயணாா் பதிகம் பாடி மீட்ட தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக தேரோட்ட நிகழ்ச்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இந்த ஆண்டு, தோ்த் திருவிழா மே 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இதையொட்டி, அவிநாசி அருகே சின்னக்கருணைபாளையம் பொதுமக்கள், கவுண்டம்பாளையத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட 2 மண் குதிரைகளை மலா்களால் அலங்கரித்து, பூஜை செய்து ஆகாசாராயா் கோயிலுக்கு கொண்டு வந்தனா்.

அப்போது, பொதுமக்கள் வழிநெடுகிலும் சாலைகளில் தண்ணீா் ஊற்றியும், பக்தா்களுக்கு ஆங்காங்கே குடிநீா், நீா்மோா், குளிா்பானம்

உள்ளிட்டவை வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனா்.

இதைத் தொடா்ந்து, ஆகாசராயருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்று, பொங்கல் வைத்து அனைவருக்கும்

அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Image Caption

மண் குதிரைகளை சுமந்து வந்த கிராம மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT