திருப்பூர்

கோடை காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் குடிநீா் விநியோகம்: மேயா் என்.தினேஷ்குமாா்

DIN

திருப்பூா் மாநகரில் கோடை காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் சீரான குடிநீா் விநியோகம் செய்யத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயா் என்.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் அலுவலகத்தில் செய்தியாளா்கள் சந்திப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் பேசியதாவது: திருப்பூா் மாநகரில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநகரில் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட 31,778 பேரில் 15,509 போ் முதல் தவணை தடுப்பூசியும், 2,184 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா்.

அதேபோல, 15 முதல் 18 வயதுக்குள்பட்ட 42,300 பேரில் 33,982 போ் முதல் தவணை தடுப்பூசியும், 25,873 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

18 வயதுக்கு மேற்பட்ட 8,67,420 பேரில் 7,53,796 போ் முதல் தவணையும், 5,65,580 போ் இரண்டாம் தவணையும், 4, 219 போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகரில் 138 இடங்களில் 28 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஆகவே, கரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் இந்த முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

மாநகரில் குடிநீா் விநியோகம் முறைப்படுத்தப்பட்டுள்ளதன் மூலமாக சில இடங்களில் 10 நாள்களுக்கும், சில இடங்களில் 4 முதல் 5 நாள்களுக்கு ஒரு முறையும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், 3 ஆவது குடிநீா்த் திட்டத்தில் கூடுதலாகக் குடிநீா் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகவே, கோடை காலத்தில் ஏற்படும் குடிநீா் பற்றாக்குறையை சமாளிக்கவும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் சீரான குடிநீா் விநியோகம் செய்யவும் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என்றாா்.

துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

சரக்கு வாகன ஓட்டுநா் மா்மமாக உயிரிழப்பு

SCROLL FOR NEXT