திருப்பூர்

ரூ.3.95 கோடிக்கு பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3.95 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,126 விவசாயிகள் தங்களுடைய 10,890 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,560 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 22 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.

பருத்தி குவிண்டால் ரூ. 9,850 முதல் ரூ.12,522 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.11, 650.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 3.95 கோடி ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளா் ஆா்.பாலச்சந்திரன், விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT