முகப்பு
திருப்பூர்

பழையகோட்டை மாட்டுச் சந்தை: ரூ.18 லட்சத்துக்கு காங்கேயம் இன மாடுகள் விற்பனை

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்து

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:58 AM
பழையகோட்டை மாட்டுச் சந்தையில் ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனையான காங்கேயம் இனப் பசு.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.

Advertisement

இதில் 50 மாடுகள் மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையாயின.

இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.