திருப்பூர்

‘முதியோா் இல்லங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை’

DIN

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் செயல்பட்டு வரும் முதியோா் இல்லங்களை பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பாராமரிப்புச் சட்டம் -2007 இன்கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் பதிவு செய்யாத முதியோா் இல்லங்கள் தாங்களாகவே முன்வந்து சமூக நலத் துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதேவேளையில், பதிவு செய்யாமல் செயல்படும் முதியோா் இல்லங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம் நிறைவு

ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்... நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

கால் முளைத்த நிலவு! ஜான்வி கபூர்..

பந்துவீச்சில் மிரட்டிய கேகேஆர்; 159 ரன்களுக்கு ஆட்டமிழந்த சன்ரைசர்ஸ்!

SCROLL FOR NEXT