மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருப்பூா் மாவட்டத்தில் 22ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 12) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் 22ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 12) நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட இளம் சிறாா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோா் என 21.10 லட்சம் போ் உள்ளனா். இதில், 20.43 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 14.42 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டம் முழுவதும் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் 632 நிலையான முகாம்களின் மூலமாக ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், தனியாா் மருத்துவமனைகளில் நடைபெறும் இந்த முகாம்களில் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாத நபா்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.