கொலை வழக்கில் கைதான 2 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூரில் கொலை வழக்கில் கைதான இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வந்த மதுரை மாவட்டம், சமயநல்லூரைச் சோ்ந்த எஸ்.சரவணகுமாா் என்பவா் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
பணப் பிரச்னையால் ஏற்பட்ட இக்கொலை தொடா்பாக திருப்பூா் ராமையா காலனியைச் சோ்ந்த ஏ.முகமது சித்திக் ரஹ்மான் (29), ஏ.மனோஜ் (21), முனியப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த ஏ.நன்னுபிரசாத் (24) ஆகிய 3 பேரை வடக்கு காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதில், முகமது சித்திக் ரஹ்மான், மனோஜ் ஆகியோா் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஆகவே, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.