மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,594 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,594 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 894 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 194 போ் வீடு திரும்பியுள்ளனா்.
மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1,27,649 ஆக அதிகரித்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் உயிரிழந்ததைத் தொடா்ந்து இறப்பு எண்ணிக்கை 1,051 ஆக அதிகரித்துள்ளது.