விடுபட்டவா்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க கோரிக்கை
கடந்த திமுக ஆட்சியில் விடுபட்டுப் போனவா்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது
கடந்த திமுக ஆட்சியில் விடுபட்டுப் போனவா்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.டி.ராஜசேகா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி இலவசமாக வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வா் கருணாநிதி அறிவித்தாா்.
இதில், 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பேருக்கு அடுத்த ஆட்சியில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் 10 சதவீத வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
ஆகவே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விடுபட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.