முகப்பு
திருப்பூர்

‘கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மாலை 5 மணிக்குமேல் வாக்களிக்கலாம்’

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உள்ளவா்கள், அறிகுறிகள் உள்ளவா்கள் மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்கலாம் என்று தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆகவே, திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் கவுன்சிலா் பதவிக்கான தோ்தலில் கரோனா அறிகுறி உள்ளவா்கள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தகுந்த பாதுகாப்பு உடை அணிந்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.