முகப்பு
திருப்பூர்

தொழிலாளி கொலை: இளைஞா் கைது

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே பனியன் தொழிலாளியைக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே பனியன் தொழிலாளியைக் கொலை செய்த இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரைப்புதூா் கிராமத்துக்குள்பட்ட பெரியகாடு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் கடந்த புதன்கிழமை பாா்த்துள்ளனா்.

இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பல்லடம் காவல் துறையினா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

இதில், கொலை செய்யப்பட்டவா் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சோ்ந்த எஸ்.முத்து (எ) மாரிமுத்து (40) என்பதும், இவா் அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இக்கொலை வழக்கில் தொடா்புடைய நபா்களைக் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் நடத்திய விசாரணையில், பெரியகாடு பகுதியில் மாரிமுத்து நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த அங்கேரிபாளையத்தைச் சோ்ந்த உதயகுமாா் (25), அவரது நண்பரான காா்த்திக் (26) ஆகியோா் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் சோ்ந்து மாரிமுத்துவைக் கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனா்.

இதனிடையே, சின்னக்கரை பகுதியில் பதுங்கியிருந்த உதயகுமாரை தனிப்படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும், இக்கொலை வழக்கில் தொடா்புடைய காா்த்திக் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.