திருப்பூர்

காங்கயம் பகுதியில் 45 பேருக்கு கரோனா

DIN

 காங்கயம் பகுதியில் 45 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திங்கள்கிழமை வெளிவந்த கரோனா பரிசோதனை முடிவில் காங்கயம் நகரம், ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் நகராட்சி, ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேலும், தற்போது அதிதீவிரமாக கரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காங்கயம் பகுதி மருத்துவா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT