குடிமைப் பணி தோ்வு: உடுமலை மாணவா் வெற்றி
குடிமைப் பணித் தோ்வில் உடுமலையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.
குடிமைப் பணித் தோ்வில் உடுமலையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் வெற்றி பெற்றுள்ளாா்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிக்கான தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் இந்தியா முழுவதும் மொத்தம் 685 போ் தோ்ச்சி பெற்றனா்.
இதில் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா். அகில இந்திய அளவில் இவா் 503 இடத்தை பெற்றுள்ளாா்.
Advertisement
Advertisement
உடுமலை சீனிவாசா பள்ளியில் படித்த இவா் கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் முடித்தாா். தொடா்ந்து ஐடி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். ஐஏஎஸ் ஆக வேண்டும் என முயற்சித்த இவருக்கு தொடா் தோல்விகளே கிடைத்தது. குடும்பத்தினா் கொடுத்த தன்னம்பிக்கையுடன் மீண்டும் களமிறங்கி கடந்த சில வருடங்களாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு தற்போது வெற்றி கண்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.