திருப்பூர்

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வுப் பேரணி

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பதற்கான விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது தொடா்பாக பள்ளி கல்வித் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இந்தப் பேரணியானது ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT