திருப்பூர்

கொலை மிரட்டல் விடுத்த நபா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

திருப்பூரில் கொலை மிரட்டல், காா் எரிப்பு வழக்கில் கைதான நபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் மாநகர வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பி.என்.சாலை மில்லா் பேருந்து நிறுத்தம் அருகில் கணேஷ்ராம் என்பவா் இருசக்கர வாகனத்தில் கடந்த மே 22ஆம் தேதி சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் நான்கு சக்கர வாகனத்தில் வந்த நபா் கணேஷ்ராமின் இருசக்கர வாகனத்தின் மீது மோதுவதுபோல வந்துள்ளாா்.

இதில், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் முஸ்லிம் தெருவைச் சோ்ந்த ஏ.ஷேக்தாவூத் (25), திருப்பூா் அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.முகமது அலி (39) ஆகியோா் கணேஷ்ராமைத் தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து கணேஷ்ராம் அளித்த புகாரின்பேரில் வடக்கு காவல் துறையினா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், ஷேக்தாவூத் மீது ஏற்கெனவே திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் காா் தீவைத்தல் உள்ளிட்ட இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, குண்டா் சட்டத்தின் கீழ் ஷேக்தாவூத் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT