திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

DIN

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் குண்டடத்தை அடுத்த முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் பூபதி (34). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 5ஆம் வகுப்பு பயின்று வந்த 11 வயது சிறுமியை கடந்த 2020 மே 26ஆம் தேதி தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பூபதியை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி நாகராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில் போக்ஸோ சட்டத்தில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 20 ஆண்டுகள் என மொத்தம் 60 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT