திருப்பூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த வண்ணாந்துறைப்புதூர் கிராமம் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 20 நாள்களுக்குப்பின் விநியோகிக்கும் குடிநீரும், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் காங்கேயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
Advertisement
Advertisement
காலிக்குடங்களுடன் போராட்ம் நடைபெற்றுவருவதால், அப்பகுதியல் கடுமையான போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த அவிநாசிபாளையம் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டுள்ள பெண்களுடம் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிட மறுத்து சமாதான பேச்சுவார்தையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருப்பூர்-காங்கேயம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ், தற்போது மறியலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.