டிஜேபியின் உள்கட்டமைப்பு கட்டணங்கள் குறைப்பு: தில்லி அரசு
வணிகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்பட வணிக நிறுவனங்கள் மீதான தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) உள்கட்டமைப்பு கட்டணங்களை தில்லி அரசு குறைத்துள்ளது.
வணிகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்பட வணிக நிறுவனங்கள் மீதான தில்லி ஜல் போா்டின் (டிஜேபி) உள்கட்டமைப்பு கட்டணங்களை தில்லி அரசு குறைத்துள்ளது.
150 முதல் 200 ச.மீ. வரையிலான நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டுமானங்கள் மற்றும் கூடுதல் கட்டுமானங்களுக்கு டிஜேபி-யின் உள்கட்டமைப்பு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. நீா் மற்றும் கழிவுநீா் உள்கட்டமைப்பு வசதிகளை நிா்வகிக்கும் டிஜேபி-க்கு, கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே இந்தக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ உத்தரவின்படி, 1,000 ச.மீ. நிலப்பரப்பு மற்றும் 150 மற்றும் 200 ச.மீ. கொண்ட நான்கு மாடி கட்டிடங்களின் பல்வேறு வகைகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் வகை மற்றும் தன்மையைப் பொறுத்து, இந்தக் கட்டணக் குறைப்பு 14.5 சதவீதம் முதல் 84.6 சதவீதம் வரை அமைகிறது.
Advertisement
Advertisement
வணிகக் கூட்டங்கள் மற்றும் விருந்து மண்டபங்களைப் பொறுத்தவரை, ‘ஏ’ மற்றும் ‘பி’ வகைகளுக்கான உள்கட்டமைப்பு கட்டணம் ரூ.57.68 லட்சத்திலிருந்து ரூ.19.80 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ‘சி’ வகையினருக்கான கட்டணம் ரூ.41.20 லட்சத்திலிருந்து ரூ.19.80 லட்சமாகவும், ‘டி’ வகையினருக்கான கட்டணம் ரூ.24.72 லட்சத்திலிருந்து ரூ.19.80 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ‘இ’ மற்றும் ‘எஃப்’ வகையிலான திட்டங்களுக்கு இனி ரூ.16.48 லட்சத்திற்குப் பதிலாக ரூ.9.90 லட்சம் மட்டுமே கட்டணமாகச் செலுத்த வேண்டும். ‘ஜி’ மற்றும் ‘எச்’ வகைகளில், கட்டணம் ரூ.16.48 லட்சத்திலிருந்து ரூ.5.94 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நான்கு மாடி அடுக்கு தொழிற்சாலை கட்டடங்களை பொருத்தவரையில், ‘ஏ’ மற்றும் ‘பி’ வகைகளுக்கான உள்கட்டமைப்பு கட்டணம் ரூ.57.68 லட்சத்திலிருந்து ரூ. 24.06 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ‘சி’ வகையினருக்கான கட்டணம் ரூ.41.20 லட்சத்திலிருந்து ரூ.24.06 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் தண்ணீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான கட்டணங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட, திருத்தப்பட்ட மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு கட்டணக் கொள்கைக்கு முதல்வா் ரேகா குப்தா கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தாா்.
நான்கு மாடி கொண்ட தொழில் கட்டிடங்களைப் பொறுத்தவரை, ‘ஏ’ மற்றும் ‘பி’ வகைகளுக்கான கட்டணங்கள் ரூ.57.68 லட்சத்திலிருந்து ரூ.8.91 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளன. ‘சி’ வகையைப் பொறுத்தவரை கட்டணம் ரூ.41.20 லட்சத்திலிருந்து ரூ.8.91 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ‘டி’ வகைக்குக் கட்டணம் ரூ.24.72 லட்சத்திலிருந்து ரூ.8.91 லட்சமாகக் குறைக்கப்படுகிறது
இதேபோல், ‘இ’ மற்றும் ‘எஃப்’ வகைகளுக்கு 73 சதவீதக் குறைப்பு மூலம் கட்டணம் ரூ. 16.48 லட்சத்திலிருந்து ரூ. 4.46 லட்சமாகக் குறைகிறது. ‘ஜி’ மற்றும் ‘எச்’ வகைகளுக்கு 83.8 சதவீதக் குறைப்பு மூலம் கட்டணம் ரூ. 16.48 லட்சத்திலிருந்து ரூ. 2.67 லட்சமாகக் குறைக்கப்படுகிறது.
இந்தக் கணிசமான கட்டணக் குறைப்பு, தொழில் திட்டங்களை அமைப்பதற்கான செலவைக் குறைப்பதோடு, தில்லியில் உற்பத்தி மற்றும் தொழில் முதலீடுகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.