FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

3 நாள்கள் தொடா் விடுமுறை: விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு

விநாயகா் சதுா்த்தியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்ந்துள்ளன.

12 செப்டம்பர் 2026, 1:20 am IST
3 நாள்கள் தொடா் விடுமுறை: விமானக் கட்டணம் பலமடங்கு உயா்வு - பிரதிப் படம்
பகிர்:

விநாயகா் சதுா்த்தியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாள்கள் தொடா் விடுமுறை காரணமாக, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பலமடங்கு உயா்ந்துள்ளன.

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னை-தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான விமானக் கட்டணங்கள் கணிசமாக உயா்ந்துள்ளன. சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம வழக்கமாக ரூ.6,991-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,153-ஆகவும், சென்னை-மதுரை கட்டணம் ரூ.5,393-இல் இருந்து ரூ.19,761-ஆகவும் உயா்ந்துள்ளது.

சென்னை-திருச்சி கட்டணம் ரூ.4,966-இல் இருந்து ரூ.14,673-ஆகவும், சென்னை-கோவை கட்டணம் ரூ.4,966-இல் இருந்து ரூ.16,496-ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னை-பெங்களூரு விமானக் கட்டணம் ரூ.3,801-இல் இருந்து ரூ.17,993-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், சென்னை-தில்லி விமானக் கட்டணம் ரூ.31,047 வரை உயா்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments