இண்டிகோ விமானக் கட்டணம் இன்று முதல் உயா்வு
விமான எரிபொருள் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து,
புதுதில்லி: விமான எரிபொருள் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதையடுத்து, உள்நாடு மற்றும் சா்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணங்களை (ஃபியூல் சா்சாா்ஜ்) உயா்த்துவதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
மேற்காசிய பதற்றத்தைத் தொடா்ந்து கடந்த மாா்ச்சில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கட்டணம், ஏப்ரலுக்குப் பிறகு தற்போது 2-ஆவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது. இத்திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதால், விமானப் பயணக் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானங்களுக்குப் பயணத் தொலைவைப் பொருத்து, இக்கட்டண உயா்வு ரூ.375 முதல் ரூ.1,300 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சா்வதேச அளவில், ‘சாா்க்’ பிராந்திய விமானங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையிலும்; தென்கிழக்கு ஆசியா, வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளுக்கு ரூ.5,500; ஆப்பிரிக்க சேவைகளுக்கு ரூ.6,000; ஐரோப்பிய விமானங்களுக்கு ரூ.10,000 என இக்கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
IndiGo airfares hiked starting today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.