FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விண்ணை முட்டும் விமானக் கட்டணம்: பல மடங்கு உயர்வால் பயணிகள் அதிருப்தி!

விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பற்றி...

விமானக் கட்டணம் - IANS
பகிர்:

தீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்பும் நிலையில் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (நவ. 8) தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூர்வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்தவர்கள், சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இன்று (நவ. 9) முதல் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பும் வகையில் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

அதிகயளவிலான பயணிகள் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததால், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சென்னைக்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 14,000, மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ. 11,000, கோவையில் இருந்து சென்னைக்கு ரூ. 6,000 என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.

இதுபோன்று மற்ற நகரங்களில் இருந்தும் சென்னைக்கு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

summary

flight ticket fare increased due to diwali holidays

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.