எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! இந்த ஆண்டில் மூன்றாவது முறை!
எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் உயர்த்தியுள்ளது குறித்து...
எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்துவதாக இண்டிகோ நிறுவனம் திங்கள்கிழமை (அக். 5) அறிவித்துள்ளது.
ஜெட் எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வானது நாளை (அக். 6) முதல் அமலுக்கு வரும் என இண்டிகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான கட்டண உயர்வின் அளவு, தூரத்தைப் பொறுத்து ரூ.100 முதல் ரூ.350 வரை உள்ளது. அதேபோல, சர்வதேச விமானப் பயணங்களுக்கும் கூடுதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த விமான நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெட் எரிபொருள்களின் விலை உயர்ந்ததே இந்தக் கட்டண உயர்வுக்கு காரணம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 500 கிலோமீட்டர் வரையிலான தூரத்துக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம் ரூ. 375 ஆகவும், 501 முதல் 1,000 கிலோமீட்டர் வரையிலான தூரத்துக்கு ரூ. 600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1,001 முதல் 1,500 கிலோமீட்டர் வரையிலான தூரத்துக்கு ரூ. 900 ஆகவும் மற்றும் 1,501 முதல் 2,000 கிலோமீட்டர் வரையிலான தூரத்துக்கு ரூ.1,150 ஆகவும் இருக்கும்.
2,000 கிலோமீட்டருக்கு மேலான தூரத்துக்கு எரிபொருள் கூடுதல் கட்டணம் ரூ.1,300 ஆக இருக்கும் என்றும் இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம்காட்டி, இந்த ஆண்டில் மட்டும் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
IndiGo announced on Monday (Oct. 5) that it is increasing the fuel surcharge.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.