FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த இண்டிகோ!

தமிழக முதல்வர் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது குறித்து...

24 அக்டோபர் 2026, 9:35 am
முதல்வர் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி - கோப்புப்படம்
பகிர்:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு இண்டிகோ நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்கப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வரிக் குறைப்பு வரும் நவ. 1-ஆம் தேதி முதல் 2027 அக். 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கு நன்றி தெரிவித்த இண்டிகோ விமான நிறுவனம், தனது எக்ஸ் தளப் பதிவில் பதிவிட்டிருப்பதாவது:

விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்கும் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்கிறோம். இந்த முற்போக்க்கான முன்னெடுப்புக்கு முதல்வர் விஜய்க்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தகைய நடவடிக்கைகள் விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்துவதோடு, மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.

இதுபோன்ற முற்போக்கான முன்னெடுப்புகள் விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும் என நம்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

summary

IndiGo has thanked Tamil Nadu Chief Minister Joseph Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments