தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறித்து...
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தரையிறக்கப்பட்டது.
புனே விமான நிலையத்திலிருந்து குவாஹாத்திக்கு இண்டிகோ விமானம் இன்று காலை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டறியப்படட்து.
Advertisement
Advertisement
இதையடுத்து, விமானி உடனடியாக புனே விமான நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். இதனால், புறப்பட்ட இடத்திற்கே திரும்பி மீண்டும் பாதுகாப்பாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
மேலும், வழக்கமான நடைமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறு குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், பயணிகளின் வசத்திக்காக ஒரு மாற்று விமானம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.