FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பவர் பேங்க் வெடித்து தீ விபத்து: ஹைதராபாத்தில் அவசரமாகத் தரையிறங்கிய சென்னை விமானம்!

தில்லியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீப்பிடித்ததால் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது.

11 அக்டோபர் 2026, 7:41 pm IST
இண்டிகோ விமானம் - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் வெடித்ததால் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது.

இண்டிகோ நிறுவனத்தின் விமானம் (6E 6115) இன்று தில்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. திடீரென விமானத்தின் பயணிகள் உடைமைகளை வைக்கும் மேல்புற அறையில் தீப்பற்றி எரிந்தது.

பயணி ஒருவரின் பையில் இருந்த பவர் பேங்க் சாதனம் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் உடனடியாக தங்களின் உடைமைகளை அங்கிருந்த அப்புறப்படுத்தத் தொடங்கினர். இதனால், விமானத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

பாதுகாப்பு நடைமுறைகளின்படி இண்டிகோ விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.

விமானப் பணியாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பயணிகளைச் சென்னைக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

summary

Fire caused by exploding power bank: Chennai-bound flight makes emergency landing in Hyderabad!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments