இன்று சென்னை - திருச்சி இண்டிகோ விமானங்கள் ரத்து
இன்று சென்னை - திருச்சி இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி..
சென்னையிலிருந்து புறப்படும் இண்டிகோ விமான சேவை இன்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை விமான நிலைத்தில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய இண்டிகோ விமானத்தில் போதிய பயணிகள் இல்லாதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னையிலிருந்து திருச்சி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால் திருச்சி - சென்னை விமானமும் ரத்தாவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் டிக்கெடுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. சென்னை - திருச்சி, திருச்சி - சென்னை ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் இது குறித்து பயணிகளுக்கு அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.