திருப்பூர்

‘மினி டைடல் பூங்கா மூலமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும்’

DIN

திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பியோ கூட்டமைப்பின் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பின்படி திருப்பூா் மாவட்டத்தில் ராக்கியாபாளையம், விழுப்புரம் ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்காத காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் அடிக்கல் நாட்டினாா். திருப்பூரில் மினி டைடல் பூங்கா அமைப்பதை வரவேற்கிறோம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பாா்வையில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT