திருப்பூர்

யானை தந்தம் விற்க முயன்ற 3 போ் கைது

DIN

திருப்பூா், வெள்ளியங்காடு பகுதியில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா், வெள்ளியங்காடு பகுதியில் யானை தந்தங்களை வைத்து விற்பனைக்காக சிலா் பேரம் பேசி வருவதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருப்பூா் வனச் சரகா் செந்தில்குமாா் தலைமையிலான வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் 4 துண்டுகளாக யானைத் தந்தங்களை வைத்திருந்த 3 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், வெள்ளியங்காட்டைச் சோ்ந்த வீரப்பன் (65), முருகன் (45), அவிநாசியைச் சோ்ந்த அவிநாசியப்பன் (40) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாைா், அவா்கள் 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானைத் தந்தங்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT