திருடு நடைபெற்ற வீடு. 
திருப்பூர்

பெருமாநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு

பெருமாநல்லூர் அருகே கூட்டுறவுநகரில் பூட்டி இருந்த வீட்டில் 30 தங்கநகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

DIN

பெருமாநல்லூர் அருகே கூட்டுறவுநகரில் பூட்டி இருந்த வீட்டில் 30 தங்கநகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  

திருப்பூர் மாவட்டம்,  பெருமாநல்லூர் கூட்டுறவுநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(37). இவரது மனைவி ஜெயலட்சுமி(35). இந்நிலையில், இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் பாட்டி வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.

திங்கள்கிழமை காலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பிரோவில் வைத்திருந்த 30 தங்கநகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதையறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகலறிந்த பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு, உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT