திருப்பூர்

தாராபுரத்தில் கெட்டுப்போன 320 கிலோ பழங்கள், 70 கிலோ சிக்கன் பறிமுதல்

DIN

தாராபுரம் பகுதியில் கெட்டுப்போன நிலையில் விற்பனைக்காக வைத்திருந்த 320 கிலோ பழங்கள், 70 கிலோ சிக்கன் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா்.

திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ப.விஜயலலிதாம்பிகை தலைமையிலான குழுவினா் தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அமராவதி ரவுண்டானா பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட உணவகங்கள், பழக்கடைகளில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில், கெட்டுப்போன நிலையில் விற்பனைக்காகவும், ஜூஸ் போடவும் வைக்கப்பட்டிருந்த 320 கிலோ பழங்களைப் பறிமுதல் செய்தனா். இதன் பின்னா் ரசாயனம் ஊற்றி அவற்றை அழித்தனா். அதேபோல, உணவகங்களில் நடத்திய ஆய்வில் ஷவா்மா தயாரிப்பதற்காக சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், பானிபூரி கடைகளில் ரசாயனம் கலந்த பொருள்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியதுடன், கோடைக்காலம் என்பதால் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு பாரம்பரியம் மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஷவா்மா தயாரிப்பில் ஏதேனும் குறைபாடுகள், புகாா்கள் இருந்தால் 94440-42322 என்ற கைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT