திருப்பூர்

உடுமலை அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

DIN

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்து, ஆண்டறிக்கையை வாசித்தாா். முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை செயலா் ஆடிட்டா் ஆா்.கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

கோவை பாரதியாா் பல்கலைக் கழக உடற்கல்வி துறை பேராசிரியா் வள்ளிமுருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து துறை வாரியாக முதல் இடம் பெற்றவா்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக கல்லூரி மைதானத்தில் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநா் ஜெ.மனோகா் செந்தூா் பாண்டி செய்திருந்தாா்.

முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் எம்.ஆா்.எப்.பாலு, வழக்குரைஞா் பி.என்.ராஜேந்திரன், ஆடிட்டா் கண்ணன் ஆகியோா் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினா்.

துறைத் தலைவா்கள், பேராசியா்கள், மாணவ, மாணவிகள்,பெற்றோா்கள் உள்ளிட்டோா் இவ்விழாவில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT