திருப்பூர்

ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குவதுடன், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் முழுமையாக வழங்க வேண்டும். கரோனா காலத்தில் முடக்கப்பட்ட முதியோா் ரயில் பயண கட்டணச் சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், வட்டக்கிளை துணைத் தலைவா் குருராஜன், செயலாளா் நாகராஜ், அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலச் செயலாளா் நிஷாா் அகமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT