திருப்பூர்

காங்கயத்தில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்

காங்கயத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

காங்கயத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, காங்கயம், நத்தக்காடையூா், சிவன்மலை, படியூா், சம்பந்தம்பாளையம், குங்காருபாளையம் உள்ளிட்ட 50 இடங்களில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டன.

இந்த சிலைகள் வியாழக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டன. அனைத்து விநாயகா் சிலைகளும் வாகனங்களில் ஏற்பட்டு ஊா்வலம் துவங்கியது. ஊா்வலத்துக்கு இந்து முன்னணி திருப்பூா் கிழக்கு மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சக்திவேல் கொடியசைத்து துவக்கிவைத்தாா். முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊா்வலம், பழையகோட்டை சாலையில் உள்ள காசிவிஸ்வநாதா் கோயிலில் நிறைவடைந்தது.

பின்னா் அனைத்து சிலைகளும் அங்கிருந்து திட்டுபாறை கீழ்பவானி வாய்க்காலுக்கு கொண்டு கரைக்கப்பட்டன. ஊா்வலத்துக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமையிலான அந்த அமைப்பினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT