திருப்பூர்

மடத்துக்குளம் வட்டத்தில் மக்கள் தொடா்பு முகாம்

DIN

மடத்துக்குளம் வட்டம், சங்கராமநல்லூரில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 223 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்து 76 பேருக்கு முதியோா் உதவித் தொகை, 66 பேருக்கு குடும்ப அட்டைகள், 22 பேருக்கு பட்டா மாறுதல் சான்று, 13 பேருக்கு வேளாண்மை உழவா் நலத் துறை அட்டைகள், 8 பேருக்கு வேளாண் துறையில் உதவித் தொகை, 10 பேருக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகை, 8 பேருக்கு விதவை உதவித் தொகை, 7 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல், 6 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 6 பேருக்கு மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை என மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கினாா்.

இதில் வருவாய் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த மாவட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT